திருப்பூர் மாவட்டம் பசும்பொன் தேசிய கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது சில நாட்களாகவே முகநூல் பகுதியில் தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று கூறிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் புகழை களங்கப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவிடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சி பசும்பொன் தேசிய கழகம் மாநில பாசறை தலைவர் முருகன் தேவர் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் சுரேஷ் மாவட்டச் செயலாளர் காசி திருப்பூர் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் சரவணகுமார் உள்பட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் நிருபர் உழைப்பாளி ஈஸ்வரன்