உங்கள் ஊராட்சியில் தற்போது எவ்வளவு பணம் இருக்கிறது? மாதாமாதம் என்னென்ன செலவுகள் செய்கின்றனர்? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் ஊரின் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை எப்படி அறிந்து கொள்வது என்பதற்கான வழிமுறை.
படி 1: https://www.egramswaraj.gov.in/financialProgressReport.do என்கிற இணைப்பை சொடுக்கவும்.
படி 2: பக்கம் திறந்தவுடன், ACCOUNTING ENTITY WISE REPORT என்பதை தேர்வு செய்யவும்.
படி 3: Cash Book Report என்பதனை தேர்வு செய்யவும்.
படி 4: Month- Wise என்பதனை தேர்வு செய்யவும்.
படி 5: கணக்கு தேவைப்படும் வருடத்தினை தேர்வு செய்யவும் .
படி6: உங்களது மாநிலத்தினை தேர்வு செய்யவும்.
படி 7: Village Panchayat என்பதனை தேர்வு செய்யவும்.
படி 8: உங்களது மாவட்டத்தினை தேர்வு செய்யவும்.
படி 9: உங்களது வட்டாரத்தினை தேர்வு செய்யவும்.
படி 10: உங்களது கிராமத்தினை தேர்வு செய்யவும்
படி 11: கணக்கு தேவைப்படும் மாதத்தினை தேர்வு செய்யவும்
படி 12: உள்ளீட்டு குறியினை சரியாக பதிவிடவும்.
படி 13: Get Report என்பதனை சொடுக்கவும்.
அவ்வளவுதான்….உங்கள் ஊர் வரவுசெலவு கணக்கு இப்போது உங்கள் கையில்…