Category: Tamil

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவு அளித்துள்ளது. கன…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாளான இன்று ரதோற்சவம் எனப்படும் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தங்கக் குடையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் மலையப்ப சாமி உலா வருகிறது. வடம் பிடித்து பக்தர்கள் தேரை இழுத்து வருகின்றனர்.

ரத்தன் டாடாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை

ரத்தன் டாடாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. மும்பையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வருமானத்தில் பெரும் பகுதியை மனிதநேய செயற்பாடுகளுக்கு வழங்கியவர் ரத்தன் டாடா. ஒரு லட்சம் ரூபாய்க்கு…

மகா அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி அக்டோபர் 10-ம் தேதி அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று முதல்வர் ஏக்நாத்…

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 56,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.7,025க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மனித, வனவிலங்கு மோதலை தடுக்க

மனித, வனவிலங்கு மோதலை தவிர்க்கும் வகையில் இலவச எண் அறிமுகப்படுத்தப்படும் என நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார். மனித, வனவிலங்கு மோதலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊருக்குள் வரும் வனவிலங்குகள் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்க…

தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா

முதல் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுக்களை தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர்…

என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு

என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர்மட்டக் குழு அமைக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய தொழிற் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க நீதிபதி என்.செந்தில்குமார் ஆணையிட்டுள்ளார்.