தமிழகம்

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு

நடிகர் விவேக் இன்று திடிரென்று மாரடைப்பால் பாதிக்கபட்டுள்ளார். அவர் தனது சாலிகிராமம் வீட்டில் இருக்கும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக வடபழனி தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்க பட்டுள்ளார். இவருக்கு நெஞ்சு வலி மட்டுமின்றி மூச்சு விடுவதற்கும் மிகவும் சிறப்படுவதால் மருத்துவர்கள் பரிசோதனை செய்து கூறியதில் இவருக்கு உடனடியாக எக்மோ சிகிச்சை எடுக்க வேண்டும் எனவும் அதோடு விவேக்கிற்கு இருதய குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இவருக்கு ஆன்ஜியோஸ் அறுவை சிகிச்சையும் உடனடியாக அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது விவேக்கிற்கு தீவிர சீகிச்சைகள் செய்து வருகின்றனர்.