Latest NewsTamilசெய்திகள்தமிழகம்

சிறுவர்களை வைத்து ஆபாச படம் எடுத்த youtuber திவ்யா கைது

தஞ்சையைச் சேர்ந்த யூடியூபர் திவ்யா மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த அவரது நண்பர் கார்த்தி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரீல்ஸ் எடுப்பதற்காக வந்துள்ளனர். தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சித்ரா என்பவர், யூடியூபர் திவ்யா சிறுவர்களுடன் இணைந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்று வீடியோவை எடுத்துத் தருமாறு நண்பர் கார்த்தியிடம் கூறியிருக்கிறார். சிறுவர்களை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வீடியோ எடுத்ததாக யூடியூபர் திவ்யா, கார்த்தி மற்றும் ஆனந்த், சித்ரா ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் சித்ரா என்பவர் தான், திவ்யாவிடம் பணம் பறிப்பதற்காக இது மாதிரியான வீடியோக்களை எடுக்க சொல்லி இருப்பதாக தெரியவந்தது.