மும்பை வர்த்தகம் தொடங்கிய உடனே உயரத்தொடங்கிய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் கடைசியில் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிந்து 80,082 புள்ளிகளானது. தொடக்க நேர வர்த்தகத்தில் 425 புள்ளிகள் உயர்ந்திருந்த சென்செக்ஸ், பிற்பகலில் 329 புள்ளிகள் சரிந்து பின் மீண்டது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37 புள்ளிகள் குறைந்து 24,435 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின

About The Author