Latest NewsTamil

மனித, வனவிலங்கு மோதலை தடுக்க

மனித, வனவிலங்கு மோதலை தவிர்க்கும் வகையில் இலவச எண் அறிமுகப்படுத்தப்படும் என நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார். மனித, வனவிலங்கு மோதலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊருக்குள் வரும் வனவிலங்குகள் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்க இலவச எண் அறிமுகபடுத்தப்படும் . காட்டுயானை நடமாட்டம் அதிகம் உள்ளதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.