Latest Newsதமிழகம்

வனத்துறை தகவல்

திருப்பத்தூரில் பிடிபட்ட சிறுத்தை தமிழ்நாடு-ஆந்திரா எல்லை வனப்பகுதியில் விடப்பட்டது: வனத்துறை தகவல்

திருப்பத்தூரில் கார் ஷெட்டில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது. திருப்பத்தூர் கார் ஷெட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை 10 மணி நேர போராட்டத்துக்குப் பின் பிடிபட்டது. நீண்ட நேர போராட்டத்துக்குப்பின் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். மக்களை அச்சுறுத்திய சிறுத்தை தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.