Latest Newsதமிழகம்

பலர் சிக்கியதால் பரபரப்பு.

மிசோரமில் கல் குவாரி இடிந்து விழுந்து 14 பேர் பலி… அடியில் பலர் சிக்கியதால் பரபரப்பு.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள அய்ஸ்வால் மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அங்குள்ள கல் குவாரி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து அம்மாவட்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.