About us

30 லட்சம் பேருக்கு அரசு வேலைகள்

​காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று வேலையில்லா திண்டாட்டம் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. அரசு வெளியிடும் புள்ளி விவரங்களை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்கு முதல்வழி மத்திய அரசிலே இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதுதான்.

மத்திய அரசின் நிறுவனங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்திலும் 30 லட்சம் காலி இடங்கள் இருக்கின்றன. இவைகள் அனுமதிக்கப்பட்ட பதவிகள். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தால் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம்.