About us

‘விடாமுயற்சி’ அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித் நடிப்பில் கடைசியாக ‘துணிவு’ படம் வெளியாகி இருந்தது. கடந்தாண்டு பொங்கலை முன்னிட்டு இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. எச். வினோத், போனி கபூர், அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்றது.

இதனையடுத்து ஒரு வழியாக கடந்தாண்டு மே மாதம் ‘விடாமுயற்சி’ டைட்டிலுடன் ‘ஏகே 62’ படத்தினை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனாலும் படம் துவங்குவது தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இதனையடுத்து ஒரு வழியாக அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ஆரம்பம் ஆனது. அங்கு முழு வீச்சில் ஷுட்டிங் நடத்தப்பட்டு வந்தது. ஒரு வழியாக அஜர்பைஜான் நாட்டில் முதல் ஷெட்யூலை படக்குழுவினர் நிறைவு செய்தனர். மகிழ் திருமேனி. இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.