Latest Newsதமிழகம்

ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்!

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் உத்திரமேரூர் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் நிவாசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணியாமல் பஜார் வீதியில் சுற்றித்திரிந்த இருசக்கர வாகனங்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.  இதனைத்தொடர்ந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி கூறினர். ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துகளும் பாதிப்புகளும் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிவைத்தனர். நிகழ்வின்போது உத்தரமேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள். காவலர்கள். பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.