About us

சிறுமிக்கு கல்லீரல் தானம் – இந்திய இளைஞருக்கு விருது!!

 சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் சக்தி பாலன் பாலதண்டாயுதம், உயிருக்கு போராடிய ஒரு வயது சிறுமிக்கு கல்லீரல் தானம் செய்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. பாலதண்டாயுதத்திற்கு 2021ம் ஆண்டிற்கான சிங்கப்பூரின் சிறந்த நபர் என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது.அவரிடம் விருது மற்றும் 11 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை நேற்று நடந்த விழாவில் அந்நாட்டு அதிபர் ஹலிமா யாக்கோப் வழங்கி பாராட்டினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.