கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஆதாரத்தை உடைக்க காத்திருக்கும் ரகசிய எண் தான் இந்த 4328. இதன் பின் உள்ள மர்மங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

கொலையை அரங்கேற்றி கொள்ளை நடந்த கோடநாடு வழக்கு புத்துயிர் பெற்று மறு விசாரணை நடந்து வருகின்றது. இந்த கொலை, கொள்ளை வழக்கில் எப்.ஐ.ஆரில் உள்ள முரண்பாடுகள் முதல் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி ?என்று தொடர்ந்து ஆரம்பத்தில் இருந்து விசாரணையின் போக்கில் நடந்துள்ள குளறுபடிகளை ஆதாரங்களுடன் அம்பலப்பத்தி வந்துள்ளது நியூஸ் 18 தமிழ்நாடு புலனாய்வுக்குழு.

இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய முக்கிய தொலைத்தொடர்பு ஆதாரமாக இருக்க கூடிய பறிமுதல் செய்யப்பட்ட 5 செல்போன்கள் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொலை, கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாகன ஓட்டுநர் கனகராஜ், கொலை நடந்த நான்காவது நாள் விபத்தில் சிக்குகிறார். சம்ப இடத்திலையே உயிரிழந்த அவரிடம் இருந்து முக்கிய ஆதாரங்கள் அடங்கிய செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்படுகின்றது.

அதே போன்று மற்றொரு முக்கிய குற்றவாளியாகிய சயானும் அடுத்த பத்துமணி நேரத்தில் கேரளாவில் விபத்தில் சிக்குகின்றார். இந்த விபத்தில் சயான் படுகாயமடைந்த நிலையில் அவவரது குழந்தையும், மனைவியும் சம்பவ இடத்திலையே மரணமடைகின்றனர்.

விபத்தில் சிக்கிய சயானிடம் இருந்தும் ஐபோன் ஒன்று பறிமுதல் செய்யப்படுகின்றது. இந்த 4328 ரகசிய எண் கொண்ட ஐபோனில் தான் கனராஜ், சயானுக்கு அனுப்பிய சில போட்டோ ஆதாரங்கள் இருப்பதாக தெரிகின்றது.

வழக்கின் முக்கிய ஆதாரங்களான இந்த இரு செல்போன்களும் வழக்கின் ஆதாரங்களாக சேர்க்கப்படாமல் இதுவரை நீதிமன்றத்தில் ஆதார சாட்சியாக காட்டப்படாமல் உள்ளது.

இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வழக்கில் சில முக்கிய நபர்கள் பின்னணியில் இருப்பதாக சயான் மற்றும் வாளையார் மனோஜ் செய்தியாளர்களை சந்தித்தனர்.

உடனே அவர்களை தமிழக தனிப்படை போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்தனர். அப்போதும் சயானிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அப்போது சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்க இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2019 ஆண்டு மார்ச் மாதம் சயான் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கேரளாவில் வைத்து கைது செய்யப்படுகின்றார். அப்போது ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்படுகின்றது.

கொலை, கொள்ளை வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில் இதுவரை இந்த ஐந்து செல்போன்களும் சாட்சியமாக காட்டப்படவில்லை.

About The Author