About us

அரையிறுதியில் பஜ்ரங் பூனியா தோல்வி.

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா தோல்வியுற்றார். மல்யுத்தப் போட்டிகளின் (Wrestling) 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா தோல்வியுற்றார். அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பஜ்ரங் பூனியா நாளை மோதுவார். இன்று நடந்த மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் பஜ்ரங் பூனியா அஜர்பைஜானின் ஹஜியிடம் 12-5 என்ற கணக்கில் தோல்வியுற்றார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் (Tokyo Olympic Games) இந்தியாவின் பஜ்ரங் புனியா மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அவர் கண்டிப்பாக தங்கப்பதக்கம் வெல்வார் என கூறப்பட்டது. இன்னும் அவர் பதக்கம் வெல்ல ஒரு வாய்ப்பு உள்ளது.