About us

OTT-யில் மாஸ் காட்டும் சூர்யா.

டி ஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா வக்கீலாக நடித்து வரும் “ஜெய் பீம்” படம் நவம்பர் மாதம் அமேசன் பிரைமில் வெளியாகிறது. 

 தற்போது அவர் நடித்து வரும் ஜெய் பீம் படம் இந்த வருடம் நவம்பர் மாதம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பற்றி கூறும் இப்படத்தில் சூர்யா வக்கீலாக நடிக்கிறார். 

அவர் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி அவரது தயாரிப்பில் உருவாகும் படங்களும் வரிசையாக அமேசான் பிரைமில் வெளியாகிறது. அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம், சரோ சண்முகம் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய்யின் மகன் நடிக்கும் ஓ மை டாக் திரைப்படம், இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார் ஜோதிகா நடிக்கும் உடன்பிறப்பே திரைப்படமும் செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் மாதங்களில் ரிலீசாகிறது.