Latest News

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுமிகள்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சிறுமிகள் இரண்டு பேர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள் இந்திய எல்லைக்குள் வருவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்ட வீரர்கள் அவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தவில்லை. இரண்டு சிறுமிகளையும் பிடித்து அவர்கள் யார் என்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அப்பாஸ்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

லைபா சபீர் (17), சனா சபீர் (13) என்ற இரண்டு சிறுமிகளும் தெரியாமல் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்திய ராணுவத்தினர் சிறுமிகளுக்கு உணவு கொடுத்து, அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தனர்.

தொடர்ந்து சிறுமிகளை பாகிஸ்தான் தரப்பிடம் ஒப்படைக்க இந்திய ராணுவத்தினர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ரஹ்மான்
செய்தியாளர்,
தமிழ் மலர் மின்னிதழ்.