Latest NewsTamilசெய்திகள்தமிழகம்பிரபலங்கள்

TVK கட்சிக்கு நிர்வாகிகள் நியமனம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாவட்டச் செயலாளர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை பலரை நியமித்து விஜய் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். விசிகவிலிருந்து அண்மையில் விலகிய ஆத்வ் அர்ஜுனா, அதிமுகவிலிருந்து விலகிய நிர்மல் குமார் ஆகியோர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கி விஜய் உத்தரவிட்டுள்ளார். விஜய் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியிலானக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், வலுவானத் தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.