Latest NewsTamilசுற்றுலாசெய்திகள்தமிழகம்

ரகசிய கேமரா

ராமேஸ்வரத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள், கடலில் நீராடுவது வழக்கம். நீராடும் பக்தர்கள், அருகேயுள்ள தனியார் உடை மாற்றும் கூடங்களில் சென்று உடை மாற்றிக்கொண்டு கோவிலுக்கு செல்கின்றனர். இத்தகைய தனியார் உடை மாற்றும் கூடங்களில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அங்கு உடை மாற்றச் சென்ற பெண் ஒருவர் கண்டுபிடித்தார். அவர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணன், மீரான் மைதீன் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.