Latest NewsTamil

மகா தீபத்தின்போது 11,500 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா தீபத்தின்போது 11,500 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் திருவண்ணாமலை கார்த்திகை பரணி தீபத்திற்கு 7,050 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின்போது மலை மீது ஏற 2000 பக்தர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுவர், திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத்தின்போது கோயிலுக்குள் கற்பூரம் ஏற்ற முற்றிலும் தடை, தீபத் திருவிழாவின்போது தங்கும் விடுதி கட்டணங்களை உயர்த்தினால் நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.