Latest NewsTamil

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவு அளித்துள்ளது. கன முதல் மிக கனமழை பெய்தால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதோடு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளது.