தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு
தமிழ்நாட்டில் 18 ராம்சர் அங்கீகாரம் பெற்ற நீர்நிலைகள், காப்புக்காடுகள் பகுதியில் சிலைகளை கரைக்க தடை விதித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு அளித்துள்ளது. நாகை வேதாரண்யம் பறவைகள் சரணாலயம், ஈரோடு வெள்ளோடு சரணாலய நீர்நிலை, சென்னை பள்ளிக்கரணை, கடலூர் பிச்சாவரம் அலையாத்தி நீர்நிலை பகுதி மற்றும் பழவேற்காடு ஏரியில் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


 
							 
							