Latest Newsதமிழகம்

சிறுபான்மை மொழி மாணவர்களும், கட்டாயம் தமிழ் தேர்வு எழுத வேண்டும்: தேர்வுத்துறை உத்தரவு

சிறுபான்மை மொழி மாணவர்களும், கட்டாயம் தமிழ் தேர்வு எழுத வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. “பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும். தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளை தாய் மொழியாக கொண்ட மாணவர்களும், இந்தாண்டு தமிழ் பாட தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும்” எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக, சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு தமிழ் பாடத் தேர்வில் இருந்து கடந்தாண்டு விலக்கு அளிக்கப்பட்டது.