Latest News

மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை தேர்வில் ஆள்மாறாட்டம்

மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மத்திய பிரதேச இளைஞர் கைது செய்துள்ளனர். ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை மையத்தில் வீரர்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டவரும், உடல் தகுதி தேர்வில் பங்கேற்றவரும் வெவ்வேறு நபர்கள் என்பது பயோமெட்ரிக் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூரில் தங்கியுள்ள கரண் சிங் ரத்தோர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என விசாரணையில் தகவல். 2023ல் நடத்த எழுத்துத்தேர்வை தொடர்ந்து நேற்று நடந்த உடல்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது விசாரணையில் அம்பலம்✳️✳️