லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்
லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்பது திருமணம் அல்ல என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. துணையை கணவர் என்று அழைக்க முடியாது. சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும். எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்தது தொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


 
							 
							