Latest Newsதமிழகம்

மதுரையில் இளைஞர் ஆணவப்படுகொலை

மதுரையில் இளைஞர் ஆணவப்படுகொலை? தலையை துண்டித்து வீசிய கொடூரம்!

விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் அழகேந்திரன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ருத்ரபிரியா என்ற மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்

வேலை தேடும் விசயமாக கடந்த 24.6.2024ல் மதுரை கள்ளிக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார் அழகேந்திரன். அப்போது ருத்ரபிரியாவின் தாய்மாமன் பிரபாகரன், தனியாக பேச வேண்டும் என்று சொல்லி அழகேந்திரனை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்

24ம் தேதிக்கு பின்னர் அழகேந்திரன் வீடு திரும்பாததால், அவரை யாரும் தொடர்புகொள்ள முடியாததால், தாயார் மாரியம்மாள் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், உறவினர்களும் அழகேந்திரனை தேடி வந்த நிலையில், 26.6.2024 காலையில் கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் தலை துண்டிக்கப்பட்டு, நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் வந்திருக்கிறது