தமிழகம்

திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மனைவி கொலை: 2 பேருக்கு ஆயுள்!!

பெரம்பலுார்: திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மனைவி கொலை வழக்கில், தொடர்புடைய பெண் உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரியலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்து.

அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வேலாயுதநகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர், கடலுார் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இவரது மனைவி பாரதியை, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி ஜெயந்தி,47, ஒக்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜன் மகன் சின்னராசு,22, ஆகிய இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த 15 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.