About us

வன்னியர் இட ஒதுக்கீடு வழக்கு: இன்று தீர்ப்பு!!

புதுடில்லி :வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, வன்னியர் இடஒதுக்கீடுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் பா.ம.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.