About us

ரஷ்யாவின் ஏவுகணைகளில் 60% வரை தோல்வியடைகின்றன: அமெரிக்கா!!!

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்தும் சில துல்லிய ஏவுகணைகளில் 60 சதவிகிதம் அளவிற்கு தோல்வியடைவதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் மிகச் சிறிய ஆயுதப் படைகளுக்கு எதிராக ரஷ்யாவின் ராணுவம் பலம் வாய்ந்ததாக இருந்த போதிலும் ஒரு மாதமாக ரஷ்யா அதன் நோக்கங்களை அடைய முடியவில்லை. இந்த சூழலில் தான் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தாங்கள் அறிந்த தகவல்களை ராய்டர்ஸ் செய்தி நிறுவனங்களிடம் பகிர்ந்துகொண்டனர். அதில் ரஷ்யாவின் சில துல்லிய ஏவுகணைகளின் தோல்வி விகிதம் அதிகம் இருப்பதால் தான் உக்ரைனின் விமானப் படையை வலுவிழக்கச் செய்ய முடியவில்லை என்கின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.