Latest Newsதமிழகம்

23 லட்சம் டன் நெல் கொள்முதல் ரூ.4,369 கோடி பட்டுவாடா…

சென்னை:நடப்பு சீசனில் நேற்று வரை விவசாயிகளிடம் இருந்து, 23.39 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ததற்காக, 4,369 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது. தற்போது, 2,232 கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த முறைகேட்டை தடுக்க, தமிழக விவசாயிகள் என்பதை உறுதி செய்ய, அவர்களின் விபரங்களை முன்கூட்டியே பெறும், ‘ஆன்லைன்’ பதிவு அமல்படுத்தப்பட்டது. இதற்கு, ஆரம்பத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், அதன் அவசியம் குறித்து தெரிவித்ததும், பலரும் ஏற்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை