About us

மீண்டும் தெலுங்கில் மம்முட்டி!!!

தெலுங்கு படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கிறார் மம்முட்டி. மலையாள நடிகரான மம்முட்டி, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக பேரன்பு படத்தில் நடித்தார். தெலுங்கில் யாத்ரா படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பாக சுவாதி கிரணம் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் அவர் தெலுங்கில் நடிக்கிறார். நாகார்ஜுனா, அமலா தம்பதியின் மகன் அகில் நடிக்கும் படம் ஏஜென்ட். இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். அகிலுக்கு ஜோடியாக புதுமுகம் சாக்‌ஷி வைத்யா நடிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார். அவர் தோன்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.