About us

ஒரு நாள் எஸ்.ஐ., பணி; கல்லூரி மாணவிக்கு கவுரவம்!!!

புதுச்சேரி : உலக மகளிர் தினத்தையொட்டி, புதுச்சேரி அரசு கல்லுாரி மாணவிக்கு ஒரு நாள் எஸ்.ஐ.,யாக கவுரவ பணி வழங்கப்பட்டது. உலக மகளிர் தின விழா நேற்று கொண்டாடப் பட்டது. புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லுாரியின் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு மாணவி நிவேதா, முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில், நேற்று காலை 8:00 மணியளவில் எஸ்.ஐ., இருக்கையில் அமர வைக்கப்பட்டு, நாள் முழுதும் பணியாற்றினார். பாரதிதாசன் கல்லுாரியில் நடந்த மகளிர் தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஸ்டேஷனில் நடந்த போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி