டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு!!!
தமிழ்நாட்டில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதால், மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டாஸ்மாக் மதுபானக்கடைகளில் குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுகிறது. மீடியம் மற்றும் உயர்ரக மதுபானங்களுக்கு 20 ரூபாய் உயர்த்தப்படுகிறது. ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண மதுபான ரகங்களுக்கு 20 ரூபாய் உயர்த்தப்படுகிறது. மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 40 ரூபாய் உயர்த்தப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.


 
							 
							