About us

1500 ரூபாய்க்கு ஆசைப்பட்டது தப்பா போச்சே!!!

சமூகநலத்துறை பெண் ஊழியர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். கையும் களவுமாக பிடிபட்ட விரிவாக்க அலுவலர். காஞ்சிபுரம் கருணீகர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். அவருடைய இரண்டு பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குழந்தைகள் பாதுகாப்பு நிதி மற்றும் சலுகைக்காக விண்ணப்பித்திருந்தார். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி செய்யும் விரிவாக்க அலுவலர் பாக்கியவதி (59) அவரது பணியை செய்யாமல் மணிகண்டனின் விண்ணப்பத்தின் பரிந்துரை செய்ய மிகவும் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.அந்த ஊழியர் மணிகண்டனிடம் உங்கள் விண்ணப்பத்தை உடனே பரிந்துரை செய்ய வேண்டுமென்றால் 1500 ரூபாய் பணம் லஞ்சமாக தர வேண்டும் என நிர்ப்பந்தித்தார். அந்தப் பெண் ஊழியர் பாக்கியவதி அடுத்த ஆண்டு பணி நிறைவு செய்ய இருந்த நிலையில் வெறும் 1500 ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு லஞ்சம் வாங்கியதால் அவருடைய பணி நிறைவு காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.