About us

ரஷ்யாவை அட்டாக் செய்யும் உலக நாடுகள்…. ஜோ பைடன் பகிரங்க அறிவிப்பு….!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கின. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய படைகள் தாக்க தொடங்கின. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய படைகளை மறிப்பவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தவும் ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரஷ்ய படைகள் உக்ரைனில் பயங்கர தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் ரஷ்ய தரப்பிலும் உக்ரைன் தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.