About us

போலி பத்திரப்பதிவை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா!!

தர்ணா போராட்டத்தால் ஆண்டிப்பட்டி பத்திரபதிவு அலுவலகத்தில் சுமார் ஒருமணிநேரம் பணிகள் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 15க்கும் மேற்பட்டோர்  ஆண்டிபட்டி பத்திரப் பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.‌ தங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய நிலத்திற்கு எந்தவொரு ஆவணங்களையும் சரிபார்க்காமல் பத்திரப்பதிவு செய்த ஆண்டிபட்டி சார் – பதிவாளரை கண்டித்து அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து அங்கு வந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மோசடி குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர்.‌

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை,