About us

மசாஜ் சென்டரில் பயங்கர தீ விபத்து!!

நொய்டாவில் உள்ள மசாஜ் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உட்பட இருவர் பலியாகினர். தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரும் தீயணைப்புத் துறையினரும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குறுகிய நேரத்திற்குள் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ராதா சவுகன் என்ற பெண்ணும் (வயது 26) அங்குஷ் ஆனந்த் என்ற ஆணும் (வயது 35) இந்த தீ விபத்தில் பலியாகினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.