About us

வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீடு வழக்கு- உச்ச நீதிமன்றம்…

வன்னியர்களுக்கான  10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கை எந்தவொரு காரணத்திற்காகவும் வேறு தேதிக்கு ஒத்திவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த வாதங்களின் தொகுப்பை சில மனுதாரர்கள் இன்னும் அளிக்காததால், விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் வருண் சோப்ரா கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த  நீதிபதி அமர்வு, வழக்கை எந்த ஒரு காரணத்திற்காகவும் வேறு தேதிக்கு ஒத்திவைக்க முடியாது என்று  திட்டவட்டமாக தெரிவித்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.