About us

இந்தியர்கள் கனடாவுக்கு வராதீங்க..

ஒட்டாவா: கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதையும், கொரோனா கட்டுப்பாடுகளையும் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், லாரி டிரைவர்களும் தலைநகர் ஒட்டாவா, டொரன்டோ உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தி வரும் போராட்டத்தால் இயல்புநிலை பாதித்துள்ளது. எனவே, போராட்டம் நடக்கும் நகரங்களுக்கு இந்தியாவில் இருந்து யாரும் வர வேண்டாம் என்று கனடாவில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது. மேலும், அரசின் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றும்படி கனடாவில் வசிக்கும் இந்தியர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.