Latest Newsதமிழகம்

சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 தொடர்ந்து சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கடந்த ஜூன் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது பெண் பக்தையான சுஷ்மிதா என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டது. மேலும் இதில் சுஷில்ஹாரி பள்ளி ஆசிரியர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.  இதில் 30 முன்னாள் மாணவிகளை சாட்சியங்களாக சேர்த்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று அதற்கான ஆவணங்களையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்டடுள்ளது.