About us

எலுமிச்சையில் உள்ள வியக்க வைக்கும் நன்மைகள்

எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அபரிமிதமாக நிரம்பி வழியும் வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது.

எலுமிச்சை பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் தான் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கு இயற்கை வழியை நாடும் போதும் அதில் நிச்சயம் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில் எலுமிச்சை பழத்தில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்று இங்கே பார்போம்.

எலுமிச்சை (Lemon) சாற்றில் இயற்கையாக வெளுக்க வைக்கும் குணங்கள் உள்ளது. சருமத்தை இயற்கையாக வெளுக்க வைப்பதால், அது நம் சருமத்திற்கு மிகவும் பயன் அளிப்பதாக விளங்குகிறது. எலுமிச்சையை நேரடியாக சருமத்தின் மீது தேய்க்கலாம் அல்லது எலுமிச்சை அடங்கியுள்ள பேஸ் பேக்கை தடவலாம்.