உலகப் பாவை தொடர்-2
உலகப் பாவை பகுதி-2 இயற்கையோர் பெரும்பேர் ஆற்றல்!இயக்கமெலாம் அதன்கை ஆட்டம்!இயற்கையதை வெல்வோம் என்றுஇயன்றவரை முயன்று,உண்மை வியக்குமள வெடுத்துச் சொல்வோர்விளக்கமெலாம் இயற்கை தன்னின்இயற்கைதனை அறிதல்ஒன்றே;இயற்கைதனை வெல்லல் அன்று; இயற்கைதனை அறியும்கல்விஇயற்கையதில் அணுவேஆகும்;இயற்கையதை அறிவார்,‘மக்கள்இயற்கையதன் படைப்பில் ஒன்றாய் இயலுவதே இயற்கை’என்னும்இயற்கையதை உணர்வார்;இந்தஉயர்மறையை உலகோர்க்கோதிஉலா வருவாய்…