போக்குவரத்துறை கொள்கை விளக்க குறிப்பில், அனைத்து பெண் பயணிகளுக்கும் அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இத்திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 7,312 சாதாரண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன . அரசு போக்குவரத்துக் கழகங்கள் 12.07.2021 முதல் கணக்கெடுப்பு நோக்கங்களுக்காக பூஜ்ஜிய சீட்டுகளை பெண் பயணிகளுக்கு வழங்குகின்றன .
12.07.2021 முதல் 26.08.2021 வரை 1,463.15 மதிப்பு பயணச் இலட்சம் பெண் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மொத்த பயணிகளில் சுமார் 60.70 % ஆகும். இந்த இலவச பயண வசதி திருநங்கைகள் மற்றும் 40 % மற்றும் அதற்கு மேலுள்ள மாற்றுத் திறனாளிகளின் துணையாளர் ஆகியோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்துறை கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் லிமிடெட் 210 சிறிய பேருந்துகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் , 66 சிறிய பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன , பயணிகளின் பயன்பாடு குறைந்து அதிக இழப்பு ஏற்பட்டதால் சிறிய பேருந்துகள் இயக்கப்படாமல் 144 மீதமுள்ள நிறுத்தப்பட்டுள்ளன. எனவே , நிறுத்தப்பட்டுள்ள இச்சிறிய பேருந்துகளை சிறந்த முறையில் பயன்படுத்திட , பிற பகுதிகளிலிருந்து மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு இயக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது .
இதன் காரணமாக சென்னை மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை உயர்வதுடன் , மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் அதிகரிக்கும்.இதனை செயல்படுத்திட மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் மற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது