ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்திய லஞ்சம் ஒழிப்பு போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
பட்டாபிராம் பகுதியில் காலிமனை வரிவிதிப்புக்கு லஞ்சம் கேட்டதாக பில்கலெக்டர் கார்த்திக் மீது கலைச்செல்வி என்பவர் லஞ்சம் ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து ஏடிஎஸ்பி சீனிவாச பெருமாள் தலைமையிலான 12 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பில் கலெக்டர் கார்த்தியின் உதவியாளர் வின்சென்ட் என்பவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வின்சென்ட்டை துரத்தி பிடித்தனர்.
பில்கலெக்டர் கார்த்திக்கிற்கு பதிலாக அவருடைய உதவியாளர் வின்சென்ட் 5000 ரூபாய் வாங்கியதால் அவர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து கார்த்திக், வின்சென்ட் ஆகிய இருவரிடமும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.